சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 5200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக போலியாக பேஸ்புக்கில் சுற்றும் கருத்துக்களை நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் தவறான கருத்துகளை பரப்பும் செய்திகளை ரிப்போர்ட் செய்யும் பொதுமக்களுக்கு பேஸ்புக் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.