Skip to main content

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரீல்ஸ் எடுக்க முயன்ற இன்ஸ்டாகிராம் பிரபலம்; அடுத்து நடந்த விபரீதம்!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Instagram celebrity who tried to take reels in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் ஆன்வி கம்தார் (27). இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வந்துள்ளார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்களை கொண்ட ஆன்வி கம்தார், ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு அவரது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது, நீர்வீழ்ச்சியின் அருகே அவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். 

இதில் பதற்றமடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், பள்ளத்தில் விழுந்த ஆன்வி கம்தாரை தீவிரமாக தேடி வந்தனர். ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தினர். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது பள்ளத்தில் விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரீல்ஸ் வெளியிட்ட மனைவி; துண்டுதுண்டாக வெட்டி படுகொலை செய்த கணவர்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
husband incident wife because release instagram reels

ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரதீப் போலா. இவருக்கு மதுமிதா(24) என்ற பெண்ணுடன் திருமணமாகி இருவரும் 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. பிரதீப் தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் தெலுங்கானாவில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் உணவகத்தில்  பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் மனைவி மதுமிதா அதிகம் நேரம் செல்போனில் செலவிட்டு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்டு வந்துள்ளார். ஆனால் அது பிரதீப் போலாவிற்கு பிடிக்கவில்லை. இதனைக் கண்டித்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். ஆனால் இதனை மதுமிதா கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செல்போனிலேயே நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரதீப் போலா சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியைக் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி தனது வீட்டுக் குளியலறையில் வைத்துள்ளார். 

அதன்பிறகு பிரதீப் போலா தனது குழந்தையுடன் தலைமறைவாகியுள்ளார். சில தினங்களாக பிரதீப் வேலைக்கு வராததால், அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆளில்லா வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்த அவர்கள், உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் குளியலறையில் இருந்து மதுமிதாவின் உடலைக் கைப்பற்றினர். தொடர்ந்து மதுமிதாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்த  போலீசார் பெகும்பேட்டையில் தலைமறைவாக இருந்த பிரதீப் போலாவை கைது செய்தனர். அதன்பிறகு அவரிடன் நடத்தப்பட்ட விசாரணையில் ரீல்ஸ் வெளியிட்டதால் கொலை செய்தேன் என்பதனை ஒப்புக்கொண்டார். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தற்போது தெலுங்கானாவின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.