ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றம்!

mark

உலக அளவில் அதிகம்பயன்படுத்தப்படும் சமூகவலைதளங்களில்ஒன்று ஃபேஸ்புக். தனது நிறுவனத்தின் தொழில்நுட்ப கட்டமைப்புகளில் ஃபேஸ்புக் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் நிலையில், அந்நிறுவனத்தின் பெயரை மாற்ற நிறுவனத் தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில், நேற்று (28.10.2021) நடந்தஃபேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திரகூட்டத்தில்,ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் 'மெட்டா' என மாற்றப்படுவதாகநிறுவனத்தின் சிஇஓ மார்க் ஸூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.மெட்டாவர்ஸ் என்றமெய்நிகர் உலகத்தை வடிவமைப்பதற்கான முதற்படியாக இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில்ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டாலும், அந்தநிறுவனத்தின் சமூகவலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook meta metaverse
இதையும் படியுங்கள்
Subscribe