Advertisment

ஃபேஸ்புக் மட்டுமா இன்ஸ்டாகிராமுமா ஹாக்கிங் பற்றி... ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம்...?

ff

Advertisment

உலக அளவில் மொத்தம் 50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளதாகவும் 40 மில்லியன் கணக்குகள் ஆபத்துக்குள் இருப்பதாகவும் சென்ற வாரம் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் மக்கள் தங்களின் கணக்குகளும் பாதிக்கப் பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்தனர். முக்கியமாக ஃபேஸ்புக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த இன்ஸ்டாகிராம் மற்றும் பல சமூகஊடக கணக்குகளும் பாதிக்கப் பட்டிருக்குமோ என்றும் அச்சத்தில் இருந்தனர். ஃபேஸ்புக் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று செய்திவந்த மறுதினமே ஃபேஸ்புக் நிறுவனம் அதற்கான விளக்கத்தையும் சம்மந்தப்பட்ட நபர் யார் என்பதை கண்டறியவும் போலீஸிடம் புகார் செய்துள்ளதாகவும் அறிவித்திருந்தது. அதன் விசாரணை இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது ’இது வரை நடைபெற்றுள்ள விசாரணையில்ஃபேஸ்புக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற எந்த சமூக ஊடங்கங்களின் கணக்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை’ என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விசாரணை இன்னும் முழுதாக முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

hacker mark zuckerberg instagram Facebook FB
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe