ஈரான், ரஷ்யாவைச் சேர்ந்த பேஸ்புக் பக்கங்கள் முடக்கபட்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசியல் ரீதியான தவறான கருத்துக்களை சித்தரித்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இந்த பேஸ்பக்கங்களை முடக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க நாட்டின் அரசியலில் சமூக வலைதளங்கள் மூலமான சர்வதேச நாடுகளின் தலையீடு இருக்கிறது என்ற புகார் உள்ளது. அந்த புகார் குறித்து அமெரிக்க செனட்டில் வருகின்ற 5ஆம் தேதி விளக்கம் அளிக்க இருக்கின்றனர்.
அதற்கு முன்னதாக சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பிவரும் பேஸ்புக் பக்கங்கள் ஈரான் மற்றும் ரஷ்யாவிலிருந்து செயல்பட்டதை அந்நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில், இதுவரை 652 பக்கங்களை பேஸ்புக் முடக்கியுள்ளது.