ஐரோப்பியாவை சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்ற இளம் பெண் டாட்டூ வரைந்து கொள்வதில் அதீத ஆர்வம் கொண்டவர். உடலில் பெரும்பாலான பகுதிகளில் அவர் டாட்டூ வரைந்துள்ளார். இதற்கிடையே பிரபல பாப் இசை பாடகர் பொபேக் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய கண்களில் டாட்டூ வரைந்துள்ளார். இதை பார்த்த அலெக்சாண்ட்ராவுக்கும் அதே போல் கண்களில் டாட்டூ வரைய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

Advertisment

இதற்காக டாட்டூ வரையும் கடைக்கு சென்ற அவர், அங்கு தனக்கு கண்களில் டாட்டூ வரைய வேண்டும் என்று கூறியுள்ளார். போதிய முன் அனுபவம் இல்லாத அந்த கடையில் வேலை பார்த்த இளைஞர் அவருக்கு கண்களில் டாட்டூ வரைந்தார். ஆனால் அவருக்கு டாட்டூ போட்ட சில நிமிடங்களில் இருந்தே கண்களில் எரிச்சல் ஏற்பட ஆரம்பித்தது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவருடைய வலது கண் முழுவதும் பார்வை இழந்துவிட்டதாகவும், இடது கண் விரைவில் பார்வை இழக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Advertisment