Advertisment

அமெரிக்காவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் - உள்நாட்டு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!

capitol building

Advertisment

அமெரிக்கஅதிபர் தேர்தலில்ஜோபைடன்வெற்றிபெற்றதை அங்கீகரிக்கும் நாடாளுமன்றகூட்டத்தின்போது, ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றகட்டடத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறைக்கு அமெரிக்கத் தலைவர்கள்மட்டுமின்றிஉலகம் முழுவதுமுள்ள தலைவர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும் நாடாளுமன்றகட்டடம் அமைந்துள்ள வாஷிங்டனில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.

அதன்பிறகு கடந்த 20ஆம் தேதி ஜோபைடன், அமெரிக்காவின் புதிய அதிபராகபதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், அமெரிக்காவில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம்என அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகஅமெரிக்கஉள்நாட்டுப் பாதுகாப்புத்துறை, "சிலசித்தாந்தங்களால் உந்தப்பட்டு,அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதையும்அதிபர் மாற்றத்தையும் ஆட்சேபிக்கும் வன்முறையாளர்கள், வன்முறையைதூண்டவோ அல்லது வன்முறையில் ஈடுபடவோஅணி திரளலாம். அவர்கள் தவறானகதைகளால் தூண்டப்பட்டும் இதனைச் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.

Advertisment

மேலும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை, அமெரிக்கநாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களையும் அரசு அலுவலகங்களையும் தாக்குவதற்கு,வன்முறையாளர்களை ஊக்கப்படுத்தலாம் எனவும்தெரிவித்துள்ளது.

Joe Biden Donad trump Parliament America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe