சீனாவின் டியாங்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு நிலையம் பசுபிக் கடலில் எரிந்து விழுந்ததாக சீனா கூறியுள்ளது.
2011 ஆம் ஆண்டுமுதல் கட்டுப்பாட்டிலிருந்த விண்வெளியின் சொர்க்கம் என்று சீனாவால்அழைக்கப்பட்ட டியாங்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு நிலையம் 2016-ஆம் ஆண்டில் கட்டுப்பாட்டை இழந்தது, ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்ததால் வளிமண்டல உராய்வின் காரணமாக எரிந்துபூமியில் அது விழ வாய்ப்புள்ளது என சீனா கூறியிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pic_2.jpg)
அப்படியிருக்க இன்று இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு பூமியின் வளிமண்டலத்தை அடைந்த டியாங்காங் 1 வளிமண்டல வெப்ப உராய்வின் காரணமாக வெடித்து சிதறி அதன் பாகங்கள் தென் பசுபிக் கடலில் விழுந்ததாக வல்லுநர்கள்அறிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)