tru

Advertisment

ஆப்கானில் நடைபெறும் தீவிரவாத செயல்களை ஒடுக்க உதவ வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் ஆப்கானின் முன்னாள் அதிபர் அளித்துள்ள பேட்டியில் ஆப்கானின் அமைதி பேச்சுக்கு பாகிஸ்தானின் உதவியை அமெரிக்கா நாடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். மேலும் அமைதி பேச்சுக்கான நடவடிக்கையை ஆப்கான் அரசே எடுத்து, அதற்கான உடன்படிக்கையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக தாலிபான்களுக்கும் ராணுவத்திற்குமான சண்டை அப்கானிஸ்தானில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.