
உலகிலேயே அதிக நீர்வழிப்போக்குவரத்து நடைபெறும் வழித்தடம் சூயஸ் கால்வாய். இந்தக் கால்வாய் வழியாகப் பயணம் மேற்கொண்ட 400 மீட்டர் நீளமான எவர்க்ரீன் நிறுவனத்தின் எவர் கிவென் கப்பல், கடுமையான காற்று காரணமாக கடந்த 22ஆம் தேதி வழியிலேயே சிக்கிக்கொண்டது. சிக்கிக்கொண்ட கப்பலை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உலகின் 12 சதவீத நீர்வழி வணிகம்,சூயஸ் கால்வாய் வழியாக நடைபெறுகிறது. இந்த வழியில் போக்குவரத்து தடைப்பட்டதால், உலக வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. தினமும் 9 பில்லியன்டாலர் அளவிற்குநஷ்டம் ஏற்படுவதாகமதிப்பிடப்பட்டது. எனவே கப்பலைவிரைவில் மீட்பது முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.
இதனையடுத்து கப்பல் சிக்கியுள்ள இடத்திலிருந்து மணலை அகற்றி, கப்பலை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றுவந்தன. இந்தநிலையில்இன்று (29.03.2021) அந்தக் கப்பலை மீட்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. கப்பல் சிக்கியிருந்த பகுதியில், 18 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு, 27 ஆயிரம் கன அடி மணல் வெளியேற்றப்பட்டு கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஏற்கனவே அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் தேங்கி நிற்பதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து சீராவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக வர்த்தகம் மேலும் சிலநாட்கள் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)