மீண்டும் கரோனாவின் மையமான ஐரோப்பா - உலக சுகாதார நிறுவனம் தகவல்!

europe

உலகிலேயே கரோனாவால்மிகவும் பாதிக்கப்பட்ட கண்டங்களில் ஒன்றாகஐரோப்பா இருந்து வருகிறது. இந்தச்சூழலில் அண்மைக்காலமாக அக்கண்டத்தில் மீண்டும் கரோனாபாதிப்புகள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன.

இந்தநிலையில்உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா கண்டத்தின் இயக்குநரானஹான்ஸ் க்ளூக், ஐரோப்பா கண்டத்தில் உள்ள 53 நாடுகளில் கரோனாபரவும் வேகம் மிகுந்த கவலையளிப்பதாகத்தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், ஐரோப்பாவில் கடந்த வாரத்தில் பதிவான கரோனாபாதிப்புகளின் எண்ணிக்கையைவிட 6 சதவீதம் அதிகமாகஇந்த வாரம் பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும் "ஒட்டுமொத்தமாக, கடந்த நான்கு வாரங்களில், தினசரி கரோனாபாதிப்பு எண்ணிக்கை 55 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எனவே ஐரோப்பா மீண்டும் கரோனாதொற்றின் மையமாகியுள்ளது" எனத்தெரிவித்துள்ள ஹான்ஸ் க்ளூக், கரோனாதொற்று அதிகரிப்புக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், குறைவாகத்தடுப்பூசி செலுத்தப்படுவதுமேகாரணம் எனவும் கூறியுள்ளார்.

europe world health organization
இதையும் படியுங்கள்
Subscribe