Skip to main content

கஜா புயலுக்கு நிவாரண நிதி; ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு...

Published on 06/12/2018 | Edited on 06/12/2018

 

eu

 

டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக நிவாரண நிதி அளிப்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய யூனியன். அதன்படி கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு 84 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த தொகையானது செஞ்சிலுவை சங்கம் மூலம் மக்களுக்கு சேர்க்கப்படும் எனவும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இந்த தொகை மூலம் வாங்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை - ஐரோப்பிய ஒன்றியம், உலக நாடுகள் முடிவு!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

JOE BIDEN - BORIS JOHNSON

 

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் நேற்று ரஷ்ய ஆதரவுப்பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை அதிபர் புதின் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார்.

 

மேலும் அப்பகுதிகளில் அமைதியைப் பேண ரஷ்யப் படைகளை அனுப்பவும் உத்தரவிட்டார். இது போர் பதற்றத்தை அதிகரித்திருப்பதுடன், உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன், டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளின் மேல் பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டார்.

 

இதனைத்தவிர ரஷ்யா மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றப்போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, புதின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளைச் சுதந்திர நாடாக அறிவித்தது ஏற்றுக்கொள்ளமுடியாதது எனவும், அது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் எனவும் கூறியுள்ளதோடு, ரஷ்ய மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்யா மீது உடனடியாக பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாகவும், அது ரஷ்யாவிற்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா இன்னும் மோசமாக நடந்துகொள்ளும் என அஞ்சுவதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

கரோனா மையமான ஐரோப்பா - மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய நாடுகள்!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

europe

 

உலகிலேயே கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட கண்டங்களில் ஒன்றாக ஐரோப்பா இருந்து வருகிறது. இந்தச்சூழலில் அண்மைக்காலமாக அக்கண்டத்தில் மீண்டும் கரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

 

உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா கண்டத்தின் இயக்குநரான ஹான்ஸ் க்ளூக், ஐரோப்பா கண்டத்தில் உள்ள 53 நாடுகளில் கரோனா பரவும் வேகம் மிகுந்த கவலையளிப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் ஐரோப்பா மீண்டும் கரோனா தொற்றின் மையமாகியுள்ளது என்றும், கரோனா தொற்று அதிகரிப்புக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், குறைவாகத் தடுப்பூசி செலுத்தப்படுவதுமே காரணம் எனவும் கூறியிருந்தார்.

 

இந்தநிலையில் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில், 10 நாடுகள் மிகவும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்கிறது என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் பல்வேறு நாடுகளில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.

 

நெதர்லாந்தில் மூன்று வாரங்களுக்கு பகுதி நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி நாட்டில் இலவச கரோனா பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கட்டாய முக கவசம், பொது இடங்களில் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு விதிக்க ஆஸ்திரியா அரசு ஆலோசித்து வருகிறது. நார்வே நாட்டில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் ஷாட்கள் வழங்கப்படுகிறது. இத்தாலி அடுத்த மாதம் முதல் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் ஷாட் வழங்கவுள்ளது.