/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsdds_1.jpg)
கரோனா பரவலுக்கு மத்தியில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி பீட்ரைசுக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
பிரிட்டனில் இதுவரை 2.9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 45,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அங்கு கரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள்கொண்டுவரப்பட்டாலும், பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி பீட்ரைசுக்கு நேற்று எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. 31 வயதான இளவரசி பீட்ரைசுக்கு இங்கிலாந்து கோடீஸ்வரரும், பிரபல தொழிலதிபருமான எடோர்டோ மாபெல்லி மோஷியுடன் நேற்று நடைபெற்ற இந்தத் திருமணத்தில் அரச குடும்பத்தின் நெருங்கிய வட்டாரத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் கடந்த மே மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த சூழலில், கரோனா பரவல் காரணமாக அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது மிகவும் எளிய முறையில் இந்தத்திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)