ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியின் போது, இங்கிலாந்து ரசிகரின் காதலை ஆஸ்திரேலிய ரசிகை ஏற்றுக் கொண்ட ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின், பிரிஸ்பேனில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் இடைவெளியின் போது, கேலரியில் இருந்த ஆஸ்திரேலிய பெண்ணிடம் இங்கிலாந்து ரசிகர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்தினார். இதனை சற்றும் எதிர்பார்க்காமல் ஆச்சரியத்தில் ஆழ்ந்த அந்த பெண் மோதிரத்தை ஏற்றுக் கொண்டு காதலரை ஆரத்தழுவினார்.
அப்பொழுது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.