Advertisment

கண்டெய்னர் லாரிக்குள் 39 பிணங்கள்... உறைந்த உடல்கள்... திணறும் போலீசார்...

குளிரூட்டப்பட்ட கண்டெய்னர் லாரி ஒன்றிலிருந்து 39 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

england container truck incident

இங்கிலாந்தின் எஸ்செக்ஸ் நகரில் உள்ள கிரேஸ் தொழிற்பேட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த குளிரூட்டப்பட்ட கன்டெய்னர் லாரி ஒன்றை போலீசார் மடக்கி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அதில் 8 பெண்கள் உட்பட 39 பேரின் சடலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடல்களை மீட்ட காவல்துறையினர், லாரியை ஒட்டி வந்த அயர்லாந்தை சேர்ந்த 25 வயதான ராபின்சன் என்பவரை கைது செய்தனர்.

Advertisment

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், உயிரிழந்தவர்கள் பல்கேரியா நாட்டினராக இருக்கலாம் என சந்தேகித்தனர். ஆனால் விசாரணையில், அந்த உடல்கள் அனைத்தும் சீனாவை சேர்ந்தவர்களுடையது என தெரியவந்துள்ளது. சுமார் -25 டிகிரி அளவு குளிரில் அவர்களை அடைத்து வைத்ததால், குளிர் தங்க முடியாமல் அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. குளிரில் உறைந்துள்ள அவர்களை அடையாளம் காணும் பணி கடினமானதாக உள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

England
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe