borris johnson

இங்கிலாந்து நாட்டில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.கரோனா பரவலைத் தொடர்ந்து, தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் நகரில்ஏற்கனவே தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் புதிய வகைகரோனாபரவலைக் கட்டுப்படுத்தும் விதமாகஇங்கிலாந்து முழுவதும் தீவிரஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர்போரிஸ்ஜான்சன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் "இங்கிலாந்தின் பல பகுதிகள்ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகளுக்குக் கீழ்இருந்தாலும், கரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும்,இந்த புதிய வகை கரோனாவைக் கட்டுப்படுத்தநாம் ஒற்றுமையாக, இன்னும்அதிகம் செய்ய வேண்டும்என்பது தெளிவாகிறது" எனதெரிவித்துள்ளார்.

Advertisment

இங்கிலாந்தில் தற்போது 27,000 பேர் கரோனா தொற்றோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஏப்ரல் மாதத்தில், கரோனா முதல் அலையின்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை விட 40 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, பிப்ரவரி மாதத்தின் இடைப்பகுதி வரை தொடரலாம் எனகூறப்படுகிறது.