ghgfhgfhgf

Advertisment

1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி ஆங்கிலேயர்களால் பஞ்சாப் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஜாலியன்வாலாபாக் படுகொலையில் நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, இதற்கான நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக, இங்கிலாந்தில் ஜாலியன்வாலாபாக் நூற்றாண்டு நினைவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவையில் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்காக இங்கிலாந்து அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை போலவே இங்கிலாந்தில் உள்ள இந்திய எம்.பி க்களும் இதே தீர்மானத்தை அந்நாட்டு பிரதமர் தெரசா மேவிடம் வலியுறுத்தினர். இந்நிலையில் இது பற்றி இங்கிலாந்து மந்திரி பரோனஸ் அன்னபெல் கோல்டி கூறுகையில், மன்னிப்பு கேட்பதற்கு சிறந்த நேரமாக நூற்றாண்டு நினைவு தினத்தை இங்கிலாந்து கருதுகிறது. இதனை ஏற்கனவே இங்கிலாந்து வெளியுறவு மந்திரியும் கூறியுள்ளார் என சுட்டிக்காட்டினார். மேலும், நூற்றாண்டு நினைவு தினத்தை கவுரவமான முறையில் அனுசரிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.