Advertisment

வாடகைக்கு வீடு பார்க்க போன போது நேர்ந்த அதிர்ச்சி... 18-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

வாடகைக்கு வீடு பார்க்க சென்ற இளைஞர் கட்டடத்தின் 18-வது மாடியில் இருந்த தவிறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த சபீல் என்ற இளைஞர் வேலை பார்த்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் சிலிகான் ஓஸிஸ் என்னும் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று வாடகைக்கு வீடு பார்த்துள்ளார். அப்போது அங்கே இருந்தவர்கள் 18-வது மாடி காலியாக இருப்பதாக தெரிவிக்கவே, சபீல் படிக்கட்டு வழியாகவே அங்கே சென்றுள்ளார். கூடவே வந்த மற்றொருவர் லிப்ட் வழியாக அங்கே சென்றுள்ளார். உடல் எடை குறைப்பதற்காக இவ்வாறு செய்வதாக தன் நண்பரிடம் சபீல் கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் 18-வது மாடிக்கு சென்ற அவர், வீடு முழுவதையும் சுற்றிபார்த்துள்ளார். பால்கனி பகுதிக்கு சென்ற அவர் அங்கே நின்றுஇயற்கை அழகை ரசித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் விரைவில் இந்தியா கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisment
accident
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe