Skip to main content

இரண்டாவது தடுப்பூசிக்கு அனுமதியளித்த இங்கிலாந்து!

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

 Oxford University and AstraZeneca vaccine

 

 

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று நோய்க்கு ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. ஏற்கனவே பைசர் தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ள அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள், இரண்டாவததாக மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளன.  

 

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு உள்ள தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு  வருகின்றன. இதேபோல் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளன. குறைந்த விலையில், பாதுகாக்க எளிதான வகையில் உருவாகியுள்ள இந்த தடுப்பூசிக்கு, அனுமதி கோரி இங்கிலாந்து நாட்டின் சுகாதார கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.         .  

 

இந்தநிலையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கு அனுமதிகோரி விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது இங்கிலாந்து நாடு அனுமதி வழங்கியுள்ளதால், அதனைத் தொடர்ந்து இந்தியாவும் ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த புதிய தடுப்பூசி, புதிய வகை கரோனாவிற்கு எதிராகவும் செயல்படும் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2023 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ‘ரிஸ்’ தேர்வு - அதன் பொருள் என்ன தெரியுமா?

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

'Rizz' chosen as the word of the year 2023...do you know what it means?

 

ஒவ்வொரு ஆண்டும் அந்தாண்டிற்கான சிறந்த ஆங்கில வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் வெளியிடும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டு மக்கள் மனநிலை ஆர்வம் மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில், 8 சிறந்த வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த 8 வார்த்தைகளில் சிறந்த வார்த்தையை முடிவு செய்வதற்கு ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் இடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பின் முடிவில், 2023 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த 12 மாதங்களில் இந்த ரிஸ் (Rizz) என்ற வார்த்தை அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த வார்த்தை, காதலை வெளிப்படுத்துதல் அல்லது கவர்ச்சிக்கான இணைய மொழியாக பெரும்பாலும் இளைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

 

ரிஸ் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி விளக்கம்: ஸ்டைல், வசீகரம் அல்லது கவர்ச்சி; காதல் அல்லது பாலியல் இணையரை ஈர்க்கும் திறன். சுருக்கமாக, இது Charisma என்ற வார்த்தையின் மையப்பகுதி. ரிஸ் (to Rizz up) என்ற சொல்லை வினைச் சொல்லாகவும் பயன்படுத்தலாம். 

 

 

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.