ADVERTISEMENT

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம்...

10:55 AM Mar 09, 2020 | kirubahar@nakk…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 95 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 3800 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் இந்த வைரஸ் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலியில் சுமார் 7000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 500க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 22 பேர் பலியாகியுள்ளனர். இதில் நியூயார்க்கில் மட்டும் 89 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ அறிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT