அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைக் கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளது. இந்தப் பனிப்புயலால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாகாணத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2 மில்லியன்மக்கள், மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எப்போது மின்சாரம் மீண்டும் கிடைக்கும்என்கிறநிச்சயமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் பனிப்புயலால் கரோனாதடுப்பூசிசெலுத்தும் பணிகளும், தடுப்பூசியை சேமித்துவைக்கும்வசதியும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பனிப்புயலையடுத்து மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பனிப்புயலால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன,சாலைகளிலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளனஎன்று அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.