ADVERTISEMENT

உலகுக்கு டாட்டா காட்டி நிலவுக்கு செல்ல இருக்கும் தொழிலதிபர்...

03:04 PM Sep 18, 2018 | santhoshkumar


கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு போகும் சுற்றுலா சேவையை தொடங்க இருப்பதாக சொல்லிவந்தது. தற்போது அந்த திட்டம் நிறைவேறியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எல்லோரையும் ஈர்க்கும் வகையில், இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், இதில் முதன் முதலாக பயணம் செல்லப்போகும் நபரை 17ஆம் தேதி அன்று சொல்வோம் என்று இந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் முதன் முதலாக நிலவுக்கு சுற்றுலா பயணியாக செல்லக்கூடிய நபர் யாராக இருக்கும் என்று பேசப்பட்டு வந்தது. பல்வேறு கணிப்புகளும் ஊடகங்கள் மத்தியில் வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று நடந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விழாவில் நிலவுக்கு செல்லப்போகும் நபரின் பெயர் வெளியிடப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபரான யுசாகு மேசாவாதான் என்று அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது இந்நிறுவனம். ஸ்டார்ட் டுடே என்னும் நிறுவனத்தை நடத்திவருபவரான இவர்தான் நிலவுக்குச் செல்லப்போகும் முதல் சுற்றுலாப்பயணி.

ADVERTISEMENT

இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் இலன் மஸ்க், “இவர்தான் 2023ம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவிற்கு செல்கிறார். இந்த நிலவு பயணத்திற்கு இவர் பணம் கொடுத்துள்ளார். உலகிலேயே பணம் கொடுத்து நிலவிற்கு செல்லும் முதல் நபர் இவர்தான்” என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT