Advertisment

இந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது..? எலன் மஸ்க் குழந்தையின் பெயரால் குழப்பத்தில் இணைய உலகம்...

elon musk named his baby boy X Æ A-12

ஸ்பேஸ்- எக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலன் மஸ்க்கிற்கு நேற்று ஆண்குழந்தை பிறந்த நிலையில், அதன் பெயர் இணைய உலகத்தில் மிகப்பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பணம் சம்பாதிப்பதில், புதிய யோசனைகளை மற்றும் தொழில்நுட்பங்களை முன்னெடுப்பதிலும் பெயர்பெற்ற நிறுவனங்களான டெஸ்லா, ஸ்பேஸ் - எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலன் மஸ்க் அவ்வப்போது பல புதிய மற்றும் வினோதமான யோசனைகளை முன்வைப்பது வழக்கம். ஆனால் தனது குழந்தைக்குப் பெயர் வைப்பதிலும் அவர் இவ்வாறு வினோதமாக நடந்துகொண்டுள்ளது பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

Advertisment

எலன் மஸ்க் மற்றும் அவரது காதலியும் கனட பாடகியுமான க்ரீம்ஸ் ஆகியோருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு X Æ A-12 எனப் பெயரிடப்பட்டுள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்தப் பெயர் குறித்த தகவல்கள் வெளியானது முதல் இந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது, இதன் அர்த்தம் என்ன என இணையவாசிகள் தலையைப் பிய்த்துக்கொண்டு திரிகிறார்கள். மேலும், இவற்றை வைத்து எக்கச்சக்கமான மீம்ஸ்களும் குவிந்து வருகின்றன. ஒரு தரப்பினரோ, அனைத்திலும் வித்தியாசம் காட்டும் மஸ்க், தற்போது குழந்தை விஷயத்திலும் அதனையே பின்பற்றியுள்ளனர் எனக் கூறிவருகின்றனர்.

elon musk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe