Advertisment

ஒரே ஒரு ட்வீட், உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்!

elon musk

Advertisment

எலான்மஸ்க்கின்டெஸ்லாநிறுவனம், இந்திய மதிப்பில்10 ஆயிரம் கோடி(1.5 பில்லியன்டாலர்) ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை வாங்கியுள்ளதாகஇந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தது. மேலும், டெஸ்லா தயாரிப்புகளை வாங்க பிட்காயினைப் பயன்படுத்தலாம் எனவும் கூறியது. இதனையடுத்து, சரிவில் இருந்த பிட்காயின்களின்விலை தடாலடியாக உயர்ந்தது.

இந்தநிலையில்சமீபத்தில் எலான் மஸ்க், “பிட்காயின்கள் தயாரிப்பு முறை சுற்றுச்சுழலைப் பாதிப்பதாகவும், அதனையொட்டி டெஸ்லா தயாரிப்புகளை பிட்காயின்களைப்பயன்படுத்தி வாங்க முடியாது” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனால் பிட்காயின்களின்மதிப்பு 30 சதவீதம்வரை சரிந்தது.

மேலும், இது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளிலும்தாக்கத்தை ஏற்படுத்தியது. டெஸ்லா நிறுவனபங்குகள் சரிய, அதனால் எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பும் சரிந்தது. இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த எலான்மஸ்க், மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

BITCOIN elon musk
இதையும் படியுங்கள்
Subscribe