ADVERTISEMENT

ஒரே ட்வீட்; ஒரு லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்!

10:10 AM Feb 24, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமீபத்தில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்திய மதிப்பில் 10 ஆயிரம் கோடி (1.5 பில்லியன் டாலர்) ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை வாங்கியுள்ளதாக அறிவித்தது. ஏற்கனவே #bitcoin என்ற ஹாஷ்டேக்கை எலான் மஸ்க், தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்ததிலிருந்தே பிட்காயின்களின் விலை அதிகரித்து வந்தது. அதன்பிறகு டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு குறித்த அறிவிப்பினைத் தொடர்ந்து, பிட்காயின்களின் விலை 17 சதவீதம் அதிகரித்தது.

இந்நிலையில் பிட்காயின் குறித்த ஒரே ஒரு ட்வீட்டால், எலான் மஸ்க் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்ட ட்வீட் ஒன்றில், பிட்காயின் விலை அதிகமாக தெரிவதாகக் கூறியிருந்தார். இதனையடுத்து டெஸ்லா நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் அவர், 15 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். இது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடியாகும்.

இதன்மூலம் எலான் மஸ்க், உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தையும் இழந்துள்ளார். மேலும் பிட்காயின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT