Advertisment

எலானின் அடுத்த அறிவிப்பு; அதிர்ந்துபோன ட்விட்டர் பயனர்கள்

Elon Musk has imposed restrictions on reading posts on Twitter

Advertisment

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும்டெஸ்லாகார்நிறுவனம் மற்றும்ஸ்பேஸ்-எக்ஸ்விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமானஎலான்மஸ்க்உலகின் முன்னணி சமூக வலைத்தளமானட்விட்டரைதன்வசப்படுத்திக் கொண்டார்.

அண்மையில்ட்விட்டர்நிறுவனத்தின் சி.இ.ஓ பதவி ஒரு நாய்க்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகஎலான்மஸ்க்தனதுட்விட்டர்பக்கத்தில் குறிப்பிட்டதோடு, சி.இ.ஓ என அச்சிடப்பட்டுள்ள டி-சர்ட்டுடன்அந்த நாய் கண்ணாடி அணிந்து ஆவணங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து காலங்காலமாக இருந்தட்விட்டர்தளத்தின்லோகோவான‘நீலக் குருவி’யை மாற்றி விட்டு நாய்க்குட்டியின் புகைப்படத்தை ட்விட்டர் லோகோவாக மாற்றினார்.இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல்வேறுசர்ச்சைகளுக்குப்பின் மீண்டும்ட்விட்டரின்பழையலோகோவானகுருவியை மாற்றினார்எலான்மஸ்க்.

சரிபார்க்கப்பட்ட பயனர்என்பதைகுறிக்க வழங்கப்படும்ப்ளூடிக்என்பது பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில்,உரியப்பணத்தைக் கட்டி யார் வேண்டுமானாலும்ப்ளூடிக்பெறலாம் எனும் முறையைஎலான்மஸ்க்கொண்டு வந்தார். இப்படிட்விட்டரைவாங்கியதுமே சர்ச்சை மற்றும் கேலிகளுக்கு உள்ளாகும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில்எலான்ஈடுபட்டு வந்தார்.

Advertisment

இந்தநிலையில் ட்விட்டர்பயனர்களுக்குஅதிர்ச்சியளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.நேற்று இரவு உலகம்முழுவதும்ட்விட்டர்முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மீண்டும்ட்விட்டர்சீரான சில மணி நேரத்தில்எலான்வெளியிட்ட பதிவில், “சிலபிரச்சனைகளுக்குத்தீர்வுகாணும்வகையில் தேவையற்ற தரவுகளைஅகற்றுவதற்காகத்தற்காலிககட்டுப்பாடுகள்கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் அதன்படிசரிபார்க்கப்பட்ட(ப்ளூடிக்) கணக்குகள் வைத்திருக்கும் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும். சரிபார்க்கப்படாத (ப்ளூடிக் இல்லாதவர்கள்) கணக்குகள் நாள்ஒன்றுக்கு600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும்.புதிதாகட்விட்டர்கணக்கு தொடங்கும் சரிபார்க்கப்படாத பயனர்கள் இனி நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.எலானின்இந்த அறிவிப்புக்குஇணையவாசிகள்கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

twitter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe