ADVERTISEMENT

ட்விட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்!

03:45 PM Jul 24, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்தவகையில் அண்மையில், ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவி ஒரு நாய்க்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதோடு, சி.இ.ஓ என அச்சிடப்பட்டுள்ள டி-சர்ட்டுடன் அந்த நாய் கண்ணாடி அணிந்து ஆவணங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, காலங்காலமாக இருந்த ட்விட்டர் தளத்தின் லோகோவான ‘நீலக் குருவி’யை மாற்றி விட்டு நாய்க்குட்டியின் புகைப்படத்தை ட்விட்டர் லோகோவாக மாற்றினார். இந்தச் சம்பவமும் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதன் பின்னர் மீண்டும் ட்விட்டரின் பழைய லோகோவான குருவியை மாற்றினார் எலான் மஸ்க்.

மேலும் சரிபார்க்கப்பட்ட பயனர் என்பதை குறிக்க வழங்கப்படும் ப்ளூ டிக் என்பது பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், உரிய பணத்தைக் கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் எனும் முறையை எலான் மஸ்க் கொண்டு வந்தார். மேலும் டுவிட்டரில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும், அதன்படி சரிபார்க்கப்பட்ட (ப்ளூ டிக்) கணக்குகள் வைத்திருக்கும் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும். சரிபார்க்கப்படாத (ப்ளூ டிக் இல்லாதவர்கள்) கணக்குகள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். புதிதாக ட்விட்டர் கணக்கு தொடங்கும் சரிபார்க்கப்படாத பயனர்கள் இனி நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ட்விட்டர் தளத்தின் லோகோவான ‘நீலக் குருவி’யை தற்போது கருமை நிறத்தில் ஆங்கில எழுத்தான எக்ஸ் (x) என்ற வடிவில் லோகோவை மாற்றியுள்ளார். இந்ந லோகோ மாற்றம் தற்போது டுவிட்டர் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT