ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை ஒன்று பனியில் படுத்து புரண்டு விளையாடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள புகழ்பெற்ற இத்தாலி சர்க்கஸ் நிறுவனம் யாக்டெரின்பார்க் நகரில் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. இதற்காக கார்லா, யான்னி என்ற யானைகளை சர்க்கஸ் அமைப்பாளர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வர சென்றுள்ளனர்.
இதற்காக யானைகளை லாரியில் ஏற்ற சர்க்கஸ் ஊழியர்கள் முயன்றுள்ளனர். ஆனால் லாரியில் ஏறுவது போல பாசாங்கு செய்த யானைகள், சாலையில் கொண்டிக்கிடந்த பனியில் ஏறி விளையாட ஆரம்பித்துள்ளன. யானையின் சேட்டையை ரசித்த ஊழியர்களும் அதனை விரட்டாமல் அதன் போக்கிலேயே விட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.