இளைஞர் ஒருவரை குட்டியானை ஒன்றி கட்டித்தழுவிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. யானைகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்று கிராமபுறங்களில் சொல்லி கேள்வி பட்டிருக்கிறோம். அதையும் தாண்டி அதனுடைய சேட்டை மிகவும் அழகாக இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisment

அதில் இளைஞர் ஒருவர் பெயிண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார். பின்னால் நின்ற குட்டி யானை ஒன்று அவர் வேலை செய்வதற்கு தடை செய்துகொண்டே இருக்கிறது. அவர் சற்று விலகி போனாலும், அந்த யானை அவரை விடுவதாக இல்லை. தன்னுடன் விளையாடுமாறு அந்த யானை அன்பு தொல்லை செய்யும் வீடியோ பார்ப்போரை நெகிழ செய்வதாக அமைந்துள்ளது.

Advertisment