Advertisment

ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 நாட்கள் பல் துலக்கலாம் - சந்தைக்கு வந்த எலெக்ட்ரிக் பிரஷ்!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் டூத் பிரஷ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஷாவ்மி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பிரஷ்ஷில் பலமுக்கிய அம்சங்கள் உள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 நாட்களுக்கு இதை பயன்படுத்தலாம். நான்கு நிறத்தில் இந்த பிரஷ்கள் வெளி வருகின்றது. போனுடன் இணைக்கும் வசதி இதில் இல்லை என்றாலும் மற்ற அனைத்து வசதிகளும் இதில் இருக்கின்றது.

Advertisment

தண்ணீரில் பாதிக்க கூடாது என்பதற்காக வாட்டர் புரூப் செய்யப்பட்டுள்ளது. அதன் தலைப்பகுதியை தேவைக்கு ஏற்ப வளைத்துக்கொள்ள முடியும் என்பது அதன் கூடுதல் சிறப்பம்சம். ரூ. 1299க்கு விற்பனைக்கு வர இருக்கும் இந்த பிரஷ் நேரடியாக கடைகளில் விற்பனைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரஷ்க்கு ஒரு வருட வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது. பல்லுக்கு எவ்வித பாதிப்பையும் இது ஏற்படுத்தாது என்றும் அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIRAL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe