உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து ஏராளமான மக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யாவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்த இருப்பதாக வதந்தி பரவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பலர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை காரணமாகவும், மக்கள் பெருமளவில் ரஷ்யாவில் இருந்து வெளியேற காரணம் என்று தெரிய வந்துள்ளது.
தற்போது ஏராளமான நாடுகள் ரஷ்யாவுடன் விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். எனவே, தற்போது எந்தெந்த நாடுகளுக்கு விமான போக்குவரத்து கிடைக்கிறதோ, அங்கே சென்று அங்கிருந்து தாங்கள் விரும்பிய நாடுகளுக்கு செல்ல ரஷ்ய மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.