Advertisment

15 வருடமாக முகத்திற்கு அடிக்கும் பவுடரை சாப்பிட்ட இளம்பெண்... மருத்துவர்கள் அதிர்ச்சி!

முகத்துக்கு அடிக்கும் பவுடரை இளம் ஒருவர் சாப்பிடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் லிசா. 21 வயது இளம் பெண்ணான அவருக்கு தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவரை மருத்துவமனைக்கு அவரின் பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இரத்த சோகை இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், அவரிடம் தனியாக பேசியதில் இருந்து அவர் உடலுக்கு பூசம் பவுடரை கடந்த 15 ஆண்டுகளாக சாப்பிட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

Advertisment

மேலும், பெற்றோருக்கு தெரியாமல் பவுடரை சாப்பிடுவதற்காக அவர் இரவு நேரத்தில் எழுந்ததையும் மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். இதுதொடர்பான உண்மையை அவரின் பெற்றோரிடம் மருத்துவர் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அவரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர் பவுடருக்காக மட்டும் இதுவரை 8 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Advertisment

VIRAL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe