பசிபிக் தீவிலுள்ள டாங்கோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 100 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. மேலும், நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நெருப்பு வளையம் என்ற பகுதியில் டாங்கா தீவு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us