இந்தோனேசியவில் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம்: 82 பேர் உயிரிழப்பு!

indonesia-earthquake

இந்தோனேசியாவின் பாலி, லாம்போக் தீவுகளில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் நேற்றிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு கடலோர பகுதியில் 10 புள்ளி 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெற பெற்றது.

பல வினாடிகள் நேரம் நீடித்த இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், பிரபல சுற்றுலாப் பகுதியான பாலித் தீவு, கிழக்கு ஜாவா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நேரம் வரை நீடித்தது. இதனால் கடலோர பகுதிகளில் பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

earthquake
இதையும் படியுங்கள்
Subscribe