வானுட்டு தீவில் நிலநடுக்கம் - 'சுனாமி' எச்சரிக்கை!

vanuatu

தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சுமார் 80 தீவுகளை உள்ளடக்கிய நாடு வானுட்டு. இந்த வானுட்டு தீவுகளில்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வானுட்டு தீவுகளின் தலைநகரமானபோர்ட் விலாவிலிருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியை மையமாக வைத்து ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டருக்குள்சுனாமி அலைகள் ஏற்படலாம் எனபசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

earthquake tsunami vanuatu
இதையும் படியுங்கள்
Subscribe