afga

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நெற்று (28.03.2025) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இந்திய நேரப்படி காலை 11:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவரும் வெளியேறி வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஏற்பட்ட இந்த பேரிடர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சுமார் 100 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இன்று (29/03/2025) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது. இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Advertisment