
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்திருப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.நீண்டகாலமாக ஆப்கானிஸ்தானில் நீடித்து வந்த போர் பரபரப்பு நேற்று முன்தினம்(15/08/2021) முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்தாலும், மக்களின் பதற்றம் இன்னும் தணியவில்லை. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் தாலிபான்கள் வசமாக்கி உள்ள ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பைசாபாத்தில் இன்று காலை 6.08 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது.
Follow Us