ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டைகோமிங் என்ற பகுதியில் போராட்டக்காரர்கள் மனித சங்கிலி அமைத்து அரசுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த சமயம் கூட்டத்துக்குள் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்தவர்களிம் பேச முற்பட்டுள்ளார். ஆனால் அவரையும் சரமாரியாக போராட்டகாரர்கள் தாக்கியுள்ளார்.

h

Advertisment

இதனால் கோபமான அவர், அந்நாட்டின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரின் காதைக் கடித்து அவர் துப்பியுள்ளார். இதனால், அந்த நபரை போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பலரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த காது கடிக்கும் நபரின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.