'Dune' to win Oscars

Advertisment

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருதுகளை வாரிக் குவித்துள்ளது'டியூன்' திரைப்படம்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி திரையரங்கில்இன்று காலை 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கியது. இவ்விழாவில் சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை டியூன்படத்திற்காக 5 இசையமைப்பாளர்கள் பெற்றுள்ளனர். மெக் ரூத், மார்க் மங்கினி, டியோ கிரீன், டக் ஹம்பீல், ரான் பார்லெட் ஆகியோர் விருதைப் பெற்றுள்ளனர். அதேபோல் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதைடியூன்படத்திற்காக கிரேக் ஃபிரேசர் பெற்றுள்ளார். சிறந்த படத்தொகுப்புக்கான விருதையும் டியூன்திரைப்படம் பெற்றுள்ளது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதையும் டியூன்திரைப்படம் பெற்றுள்ளது. சிறந்த படத்தொகுப்புக்கான விருதை ஜோ வால்க்கர் பெற்றுக்கொண்டார். சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதைடாட்ரிஸ், சிப்போஸ் பெற்றுக்கொண்டனர்.