Advertisment

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை தற்காலிக ரத்து... துபாய் அதிரடி நடவடிக்கை...

dubai suspends air india flight services

Advertisment

துபாய் - இந்தியா இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானசேவையை 15 நாட்களுக்கு ரத்து செய்வதாகதுபாய் விமானப்போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாகசர்வதேச விமானபோக்குவரத்து முற்றிலும் முடங்கியிருந்த சூழலில், தற்போது பாதுகாப்பு விதிமுறைகளை கடுமைப்படுத்தி விமானசேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளன சர்வதேச நாடுகள். அந்தவகையில் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளுக்குகுறைந்த அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியாவிலிருந்து துபாய்க்குசென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் - இந்தியா இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவையை 15 நாட்களுக்கு ரத்து செய்வதாக துபாய் விமானப்போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

dubai Air india
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe