Advertisment

துபாய் வர இந்திய விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை தேவையில்லை - துபாய் விமானநிலையம் அறிவிப்பு!

dubai

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளிலில் இருந்து துபாய்க்கு வருபவர்கள், இனி தங்கள் நாட்டு விமானநிலையங்களில் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதில்லை என துபாய் விமான நிலையம் அறிவித்துள்ளது . இந்த நான்கு நாடுகளிலும் கரோனா பரவல் குறைந்ததையடுத்து, துபாய் விமான நிலையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

அதேநேரத்தில் இந்த நாடுகளை சேர்ந்தவர்கள், துபாய்க்கான விமானம் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்குள்ளாக செய்யப்பட்ட கரோனா பரிசோதனை சான்றை சமர்பிக்கவேண்டும் என அறிவித்துள்ளது. அதேபோல் இந்தநாடுகளை சேர்ந்தவர்கள், துபாய் விமானநிலையத்தில் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

Advertisment

துபாய் விமானநிலையத்தின் இந்த அறிவிப்பு, துபாய்க்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என கருதப்படுகிறது.

indians dubai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe