சாலையில் திடீரென தோன்றிய பள்ளம்... உள்ளே விழுந்த கார்!

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பகுதியில், திடீரென சாலையில் தோன்றிய பள்ளத்தில், வேகமாக வந்த கார் ஒன்று விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் அதிசயத்தை நம்மால் எப்போதும் புரிந்துகொள்ள முடியாது. அதன் பேரிடர்களையும் நாம் விளக்க முடியாது. அப்படி பேரிடர்கள் நிகழும்போது பூமியில் உள்ள உயிரினங்கள் தான் பாதிக்கப்படும். இந்நிலையில்ம், இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பகுதியில் நிலநடுக்கத்தினால் சாலையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது.

அப்போது, அந்த சாலைவழியே வேகமாக வந்த கார் குழியினுள் விழுந்து விபத்துக்குள்ளானது. பின்னர் அருகில் உள்ளவர்கள் வந்து காரில் இருந்தவர்களை மீட்டனர். இதன் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

accident
இதையும் படியுங்கள்
Subscribe