Advertisment

டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது!

axum

அமெரிக்காவில் செயல்படும் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ என்ற நிறுவனம், மனித விண்வெளி பயணச் சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் (இஸ்ரோ), அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய திட்டத்தை ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனம் மூலம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘ஆக்சியம் - 4’ பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும், ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தனியார் விண்கலத்தை அனுப்பிய நிலையில், இஸ்ரோவும் நாசாவும் இணைந்து ‘ஆக்ஸியம் 4’ என்ற பெயரில் 4வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது. 

Advertisment

இந்த விண்கலத்தில் அமெரிக்கா, போலந்து, இந்தியா மற்றும் ஹங்கேரி ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 4  தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி  இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று (25.06.2025) பகல் 12:01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் புறப்பட்டனர்.  இந்நிலையில் ஆக்சிம் 4 திட்டத்தின் கீழ் சென்ற விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் விண்கலத்தை இந்தியாவின் குழு கேப்டன் சுபான்ஷூ சுக்லா இயக்கியுள்ளார்.

Advertisment

சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும்  விண்வெளி ஆய்வு மையத்தில் 4 நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்ய உள்ளனர். அதாவது விண்வெளியில் பயிர்கள் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி  மேற்கொள்ள உள்ளனர். விண்வெளியில் 60 அறிவியல் பரிசோதனைகள், 31 வெளி நடவடிக்கையில் இந்த 4 வீரர்களும் ஈடுபட உள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதை, ​​இந்தியாவின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் குடும்பத்தினரின் லக்னோவில் நேரடி ஒளிபரப்பை கண்டு களித்தனர். இதன் மூலம் ராகேஷ் சர்மாவிற்கு பிறகு விண்வெளிக்கு சென்ற 2 வது வீரர் என்ற பெருமையை சுபான்ஷூ சுக்லா பெற்றுள்ளார். 

NASA ISRO International Space Station Shubhanshu Shukla
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe