“நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது” - டொனால்ட் டிரம்ப் ஆதங்கம்

 Donald Trump says No matter what he do, he won't get the Nobel Prize

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது. அதன்படி, இரு நாடுகளுக்கிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

இதற்கிடையில் இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறியது. டிரம்ப்பின் கூற்றை இந்தியா மறுத்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான தாக்குதலை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது வருத்தமளிப்பதாகடொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது, “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது, எகிப்துக்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையில் அமைதியைப் பேணியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மத்திய கிழக்கில் ஆபிரகாம் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.

ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும் அந்த விளைவுகள் என்னவாக இருந்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. நான் நான்கு அல்லது ஐந்து முறை வரை அதை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க மாட்டார்கள்.ஏனெனில், தாராளமயவாதிகளுக்கு தான் அந்த விருது வழங்கப்படும். ஆனால், மக்களுக்குத் தெரியும் அதுதான் எனக்கு முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.

America donald trump nobel prize ceasefire india pakistan conflict Operation Sindoor
இதையும் படியுங்கள்
Subscribe