Advertisment

ஒரு நாளுக்கு 39; ஆட்சிக்காலத்தில் 30ஆயிரம் - பொய்யாக கூறித்தள்ளிய ட்ரம்ப்!

donald trump

முன்னாள் அமெரிக்கபிரதமர் டொனால்ட்ட்ரம்ப், தன் ஆட்சி காலத்தில், 30,573 பொய்யான அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய செய்திகளைத் தெரிவித்துள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த 30 ஆயிரம் பொய்களில், பாதிக்கும் மேற்ப்பட்டபொய்களைஅவர் தனது பதவியின் இறுதியாண்டில் கூறியுள்ளார். பதவியேற்றமுதல் வருடத்தில், ஒரு நாளைக்கு 6 பொய்களையும், இரண்டாம் வருடத்தில் ஒருநாளைக்கு16 பொய்களையும், மூன்றாம் வருடத்தில் ஒரு நாளைக்கு 22 பொய்களையும் சராசரியாக கூறியுள்ள ட்ரம்ப், இறுதியாண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 39 பொய்களைத் தெரிவித்துள்ளார்.

Advertisment

முதல் 10 ஆயிரம் பொய்களைக் கூற ட்ரம்பிற்கு 27 மாதங்கள்எடுத்துள்ளது. அடுத்த 10 ஆயிரம் பொய்களை14 மாதத்தில்கூறிய ட்ரம்ப், கடைசி 10 ஆயிரம் பொய்களைஐந்து மாதங்களுக்கு குறைவானகாலத்தில் கூறி மிரளவைத்துள்ளார்.

"உலகின் சிறந்தபொருளாதாரத்தை நாம் கட்டமைக்கிறோம்" என்பதேட்ரம்ப்அதிக முறைகூறிய பொய்யாகும். ட்ரம்ப் இந்தப் பொய்யை493 முறை கூறியுள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’பத்திரிகை கூறியுள்ளது. ட்ரம்பின் பொய்களையும் அதற்கான ஆதாரங்களையும் ஒரு தனி 'டேட்டாபேஸாக (database) உருவாக்கியுள்ள வாஷிங்டன் பத்திரிகை, அதனைபொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வரி எனபல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தியுள்ளது.

donald trump US president washington post
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe