Skip to main content

கிராமத்திற்குள் புகுந்து கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட 24 அப்பாவிகள்...

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

 

dogon and pulani people clash in mali

 

 

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் புலானி இனத்தவர்கள் வசிக்கும் கிராமத்தில் புகுந்த வேட்டைக்காரர்கள் அந்த கிராமத்தில் இருந்த அப்பாவி மக்கள் 130 பேரை கொடூரமான முறையில் கொன்று குவித்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்த சோகமே அப்பகுதியை விட்டு இன்னும் அகலாமல் உள்ள நிலையில் தற்போது மீண்டும் புலானி மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் புகுந்து டோகோன் இனத்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள், குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே இழுத்து கொடூரமாக தாக்கி, கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதலில் 24 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதலுக்கு பின்னர் அங்கிருந்த கால்நடைகளையும் அவர்கள் அபகரித்து சென்றுள்ளனர். இந்த தொடர் தாக்குதல் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாலியில் ராணுவ புரட்சி- அதிபர் கைது!

Published on 19/08/2020 | Edited on 19/08/2020

 

WEST AFRICA MALI MILLITARY PRESIDENT AND PRIME MINISTER

 

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ புரட்சி ஏற்படுள்ளது. இதனால் மாலி அதிபர் இப்ராஹிம் மற்றும் பிரதமர் சீஸேவை ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கைதை தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து விலகிய இப்ராஹிம், மாலி நாடாளுமன்றத்தையும் கலைத்தார். 

 

பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டத்தாகவும் அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்நாட்டு அதிபர் பதவி விலகக்கோரி மாலியில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அதிபர் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

கிராமத்துக்குள் புகுந்து 134 பேரை துடிதுடிக்க கொடூரமாக கொன்ற வேட்டைக்காரர்கள்...

Published on 25/03/2019 | Edited on 26/03/2019

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், ஒரு கிராமத்தில் புகுந்த வேட்டைக்காரர்கள் அந்த கிராமத்தில் இருந்த அப்பாவி மக்கள் 130 பேரை கொடூரமான முறையில் கொன்று குவித்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

134 people killed by tribes in africas mali

 

மாலி நாட்டில் உள்ள தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. அவ்வப்போது தோகோன் வேட்டைக்காரர்கள் புலானி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று, அவர்களிடம் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அதே போல நேற்று முன்தினம் புலானி இன மக்கள் வாழும் கிராமத்திற்குள் புகுந்த வேட்டைக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்ட மக்கள் அனைவரையும் கொன்று குவித்துள்ளனர். தாங்கள் கையில் கொண்டுவந்த கத்தி, ஈட்டி போன்ற கூர்மையான ஆயுதங்களால் கண்ணில்பட்ட மக்கள் அனைவரையும் கொன்று குவித்துள்ளனர். இதில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 55 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை கொன்ற தோகோன் வேட்டைக்காரர்கள் அங்கிருந்த பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்துக்குள் புகுந்து மக்களை கொன்று அந்த கிராமத்தையே சூறையாடிய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.