தென் ஆப்பிரிக்க நாட்டில் நாய் ஒன்று தனது உரிமையாளரின் மோதிரத்தை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் பெப்பர் என்ற ஒரு பெண் நாயை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று குளிப்பதற்காக சென்ற அவர் தனது மோதிரத்தை வீட்டில் இருந்த மேஜையின் மீது கழட்டி வைத்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
குளித்துவிட்டு திருப்பி வந்த பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேஜையில் வைத்திருந்த மோதிரத்தை காணவில்லை. அதற்கு அருகிலேயே பெப்பர் நாய் படுத்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நாயை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். நாயை பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளார். அதில் நாயின் வயிற்றில் மோதிரம் இருப்பதை கண்டுபடித்துள்ளனர். பிறகு மிக கடினமான முயற்சிக்கு பிறகு நாயின் வாய் வழியாக மோதிரத்தை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படத்தியது.