Advertisment

தனது உரிமையாளரின் பெண் நண்பரை துப்பாக்கியால் சுட்ட நாய்க்குட்டி...

7 மாத நாய்க்குட்டி ஒன்று தனது உரிமையாளரின் பெண் நண்பர் ஒருவரை சுட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

Advertisment

dog shoots woman accidentally in car

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள எனிட் நகரத்தை சேர்ந்த பெண் டீனா ஸ்ப்ரிங்கர் (44)கடந்த சில தினங்களுக்கு முன் தனது நண்பர் பிரெண்ட் பார்க்ஸ் (79) உடன் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது பிரெண்ட் பார்க்ஸ் தனது செல்லப்பிராணியான 7 மாத லேப்ரடார் இன நாய்க்குட்டியையும் காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது ரயில்வே கிராஸிங் ஒன்றில் காரை நிறுத்த பிரேக் அடித்தபோது, நாய்க்குட்டி துள்ளி குதித்துள்ளது.

Advertisment

அப்போது முன் இருக்கைகளுக்கு மத்தியில் பிரெண்ட் பார்க்ஸ் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கி மீது நாய்க்குட்டி காலை வைத்துள்ளது. இதனால் துப்பாக்கி விசை அழுத்தப்பட்டு, டீனாவின் தொடையில் குண்டு பாய்ந்தது. வலியால் அலறித்துடித்த டீனாவை, அவரது நண்பர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தொடையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், துப்பாக்கி போன்ற அபாயகரமான ஆயுதங்களை கையாளுவதில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

weird America
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe