Advertisment

இளம் பெண்ணை காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்த நாய்... வைரல் வீடியோ!

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் இறங்கி நீச்சல் அடித்துள்ளார். இதைப் பார்த்த அவது வளர்ப்பு நாய் ஒன்று, அவர் நீரில் நீந்த முடியாமல் போராடுவதாக எண்ணி அவரது தலை முடியை பிடித்து இழுத்து வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தற்போது பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறார்கள். நாம் எந்தளவு நாயின் மீது பாசம் வைத்து இருக்கிறமோ, அதேபோல பலமடங்கு வளர்ப்போர் மீது பாசம் வைக்கும் தன்மை உடையது நாய்கள். அதற்கு எத்தனையோ சம்பவங்கள் உள்ளது.

Advertisment

s

அதேபோல் ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. ஒரு நீச்சல் குளத்தில் பெண் ஒருவர் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் போது, ஜெர்மன் ஷெர்பர்டு வகையைச் சேர்ந்த நாய் ஒன்று, பெண் நீரில் தத்தளிப்பதாக நினைத்து நீருக்குள் குதித்து அவரது முடியை பிடித்து இழுத்து அங்குள்ள படியேறும் இடத்தில் அவரை அமரவைத்தது. இந்தக் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட தற்போது இது வைரலாகி வருகிறது.

Advertisment
dog
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe