Advertisment

தன் காலையே கடித்து சாப்பிட்ட நாய்...

dog

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஒரு நாய் யாரும் உணவளிக்காததால் பசி காரணமாக தனது காலையே கடித்து சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. தெற்கு கரோலினாவில் வசிக்கும் ஜெசிக்கா என்பவரது 6 வயது கிரேட்டென் நாய் லியூக். இதனை அவரது உரிமையாளர் பல நாட்களாக உணவு மற்றும் நீர் இல்லாமல் ஒரு கம்பத்தில் கட்டி வைத்துள்ளார். இதனால் பசி தாங்க முடியாத அந்த நாய் தனது காலினை கடித்து சாப்பிட்டுள்ளது. இதனை பார்த்த அவர்களது பக்கத்துக்கு வீட்டுக்காரர் காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் அவர்கள் அங்கு வந்து நாயை மீட்டனர். பிறகு அந்த நாயானது நோவா ஆர்க் என்ற தனியார் சேவை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மருத்துவர்கள் மூலம் அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisment

starve dog America
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe